✅தற்போது திறைசேரி பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.நேற்று மாலை நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் இன்றைய தினம் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
✅இதன்படி, ஜனவரி, பெப்ரவரி மாதங்களில் அரச ஊழியர்களின் சம்பளம் வழங்குவதில் பாரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த அமைச்சர், சமுர்த்தி மற்றும் முதியோர் கொடுப்பனவை வழங்குவதில் இரண்டு வாரங்கள் தாமதம் ஏற்படலாம் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.
✅எவ்வாறாயினும், இதற்கு தீர்வாக, அனைத்து அமைச்சுக்களுக்கும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அனைத்து அமைச்சுக்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ள நிதியிலிருந்து 5% இனை குறைக்க நேரிடுமெனவும், ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

0 coment rios: