Tuesday, 10 January 2023

பொருளாதார நெருக்கடி - கஜானாவில் பணம் இல்லை.

 

பொருளாதார நெருக்கடி - கஜானாவில் பணம் இல்லை.


🔺பொருளாதார நெருக்கடி காரணமாக திறைசேரிக்கு பணத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

🔺"நாங்கள் எதிர்பார்த்ததை விட கருவூலம் கடுமையான நிதி நெருக்கடியை எதிர்கொள்கிறது" என்று அமைச்சர் கூறினார்.

🔺அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் வழங்குவதற்காக அமைச்சுக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் 5 வீதத்தை குறைக்குமாறு ஜனாதிபதி அமைச்சரவைக்கு அறிவித்துள்ளதாக அமைச்சர் குணவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.

🔺"சமுர்த்தி கொடுப்பனவுகளை வழங்குவதில் ஒன்று அல்லது 2 வாரங்கள் தாமதம் ஏற்படலாம்" என்று அவர் கூறினார்.

Previous Post
Next Post
Related Posts

0 coment rios: