Saturday, 11 February 2023

குழந்தை பராமரிப்பில் கவனத்தில் கொள்ளவேண்டியவைகள்.

குழந்தை பராமரிப்பில் கவனத்தில் கொள்ளவேண்டியவைகள்.

குழந்தை பராமரிப்பில் கவனத்தில் கொள்ளவேண்டியவ புதிய தகவல்கள் சிறந்தமுறையில் வளர்க்கப்படும் குழந்தைகள் எதிர்கால சமூகத்தின் பாதுகாவலர்கள்.

 நமது சின்னச் சின்ன அணுகுமுறை மாற்றங்கள் குழந்தை வளர்ப்பில் மிகச் சிறந்த விளைவுகளை உருவாக்கக்கூடியவை.

1. இரண்டு முதல் மூன்று வயதுக் குழந்தையின் தேவை வேறு. ஏழெட்டு வயதுக் குழந்தையின் தேவை வேறு. பதின்பருவத்தில் இருப்பவர்களின் தேவைகள் வேறு. எல்லா பருவங்களிலும் குழந்தைகளை ஒரே மாதிரி அன்புடனும் கண்டிப்புடனும் வளர்க்க முயல்வது தவறு. அந்தந்த வயதில் ஏற்படும் உடல், மனம் மற்றும் சமூகம் சார்ந்த விஷயங்களை ஆராய்ந்து அதற்கேற்பப் பக்குவமாக கையாள்வது முக்கியம். 

2. இரண்டு வயது வரை குழந்தைக்குக் கொஞ்சுவதும் சீராட்டுவதும் தேவைப்படும். இரண்டரை வயது முதல் ஆறு வயது வரை நல்லது கெட்டதுகளை சொல்லித்தர வேண்டும். பிடிவாதம் அதிகம் இருக்கும் பருவம் இது என்பதால், கொஞ்சம் கண்டிப்புடன் நடந்துகொள்ளலாம். பொய்சொல்லும் போதும், அளவுக்கு அதிகமாகக் குறும்புத்தனம் செய்யும் போதும் தவறை சுட்டிக்காட்ட வேண்டும். செய்த தவறை திரும்பத் திரும்பச் செய்யும் குழந்தைகளிடம் கண்டிப்பைப் படிப்படியாக அதிகரிப்பதில் தவறு இல்லை. 

3. சாப்பிட மறுக்கும் குழந்தைகளைத் துரத்தி துரத்தி உண்ணவைப்பது மிகவும் தவறு. அவர்களின் உணவுகளை அவர்களுக்கு எட்டும் இடத்தில் வைத்துவிட்டு கண்டுகொள்ளாமல் விட்டுவிடலாம். அவர்களுக்குத் தேவையானதை அவர்கள் எடுத்துச் சாப்பிடுவார்கள். வலிய போய் உணவைத் தருவது, அவர்களின் பிடிவாதக்குணத்தை அதிகரிக்கும். மேலும், குழந்தைகள் தங்களுக்குப் பிடித்தமான உணவைத் தேர்வு செய்ய ஏழு முதல் பத்து சந்தர்ப்பங்கள் தேவைப்படும் என்கிறது ஓர் ஆய்வு. எனவே, ஒரு முறை குழந்தை மறுத்த உணவை வற்புறுத்தித் தருவதைவிட, வேறு வகை உணவை அதனிடம் தரலாம். மீண்டும் சில நாட்கள் கழித்து அந்த உணவை வேறு வடிவிலோ ருசியிலோ மாற்றம் செய்து கொடுத்துப் பார்க்கலாம்.

4. ஒவ்வொரு குழந்தைக்கும் உணவுத் தேவை மாறுபடுகிறது. எனவே மற்ற குழந்தைகளோடு ஒப்பிட அதிகமாகத் தருவதோ குறைப்பதோ கூடாது. அவர்களின் பசியறிந்து ஆரோக்கியமான உணவைக் கொடுப்பது நல்லது.

5. மொட்டை மாடித் தோட்டத்தில் நீர்விடுவது, வீட்டைச் சுத்தம் செய்வது போன்ற பணிகளைக் குழந்தைகளோடு சேர்ந்து செய்யுங்கள். அவர்களால் செய்ய இயன்ற வேலைகளைச் செய்ய அனுமதியுங்கள். குழந்தைகள் ஆர்வத்தோடு ஈடுபடும்போது அவர்களின் மனவலிமை அதிகரிக்கும்.

6. தினமும் இரண்டு முறை பல் துலக்குவது, தும்மல் வந்தால் கைக்குட்டையைக்கொண்டு மூக்கை மூடுவது, போன்ற நல்ல பழக்கவழக்கங்களைக் கற்றுக்கொடுக்க வேண்டும்.
 
7. ஷூவுக்குப் பாலிஷ் போடுவது போன்ற அவர்களின் சின்னச்சின்ன வேலைகளை (Self care activity) அவர்களே செய்ய அனுமதியுங்கள். இது, எதிர்காலத்தில் அவர்களைத் தன்னம்பிக்கை மிக்கவர்களாகவும் சொந்தக்காலில் நிற்பவர்களாகவும் மாற்றும். அவர்களின் ஆளுமைப் பண்பினை வளர்க்க உதவும்.

8. குழந்தைகள் செய்யும் சின்னச்சின்ன நல்ல செயல்களுக்கு எளிய கிஃப்ட்களைக் கொடுத்து ஊக்குவியுங்கள். இதனால் அவர்கள் மிகுந்த உற்சாகம் அடைவார்கள். இதுபோலவே,  அவர்கள் தவறு செய்யும்போது, தர வேண்டிய கிப்ட்களைத் தராமல் தாமதபடுத்தலாம். இது அவர்களுக்கு கண்டிப்பின் வலுவை உணர்த்தும்.

9. மார்க்கெட்டுக்கு அழைத்துச்சென்று காய்கறிகள் எங்கிருந்து வருகின்றன எனக் குழந்தைகளுக்குக் காட்டுங்கள். அவர்களுக்குப் பிடித்தமானக் காய்கறிகளை அவர்களே தேர்ந்தெடுக்க அனுமதியுங்கள். இதனால், காய்கறிகள் போன்ற சத்தான உணவுகளை உண்ணும் பழக்கமும் ஏற்படும். சமூகத் தொடர்பும் குழந்தைக்குக் கொஞ்சம் புரியும்.

10. தினமும் படிக்கும் பழக்கத்தைக் குழந்தைகளுக்கு ஏற்படுத்துங்கள். நாளிதழ்களில் வரும் செய்திகளில் சொல்லப்பட்டிருப்பவை குறித்து அவர்கள் ஏதேனும் கேட்டால், எதிர்மறை எண்ணங்கள் தோன்றாதவாறு பாசிடிவ்வான முறையில் அதற்கு விளக்கங்கள் கொடுங்கள். இது சமூகத்தில் என்ன நடக்கிறது என அவர்கள் தெரிந்துகொள்ள உதவும்.



Managing Director of 
 Tamil Tel News
 [News Editor & Present]
 S. Mohammed Osmi

14ஆம் திகதி (காதலர் தினத்தன்று) டியூட்டரிகளுக்குப் பூட்டு

அறிவுறுத்தல் விடுத்த மாநகர சபை...!

14ஆம் திகதி (காதலர் தினத்தன்று) டியூட்டரிகளுக்குப் பூட்டு



கல்முனை மாநகர சபை எல்லையினுள் இயங்கி வருகின்ற அனைத்து தனியார் கல்வி நிலையங்களையும் (டியூட்டரி) எதிர்வரும் 14ஆம் திகதி செவ்வாயன்று பூட்டுமாறு மாநகர சபை அறிவுறுத்தியுள்ளது.

அன்றைய நாள் காதலர் தினமாக அடையாளப்படுத்தப்படுவதால், மாணவிகள் மீது பகிடிவதைகள் மற்றும் வேண்டத்தகாத ஒழுங்கீன சம்பவங்கள் இடம்பெறுவதை சுட்டிக்காட்டி,

பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் விடுக்கும் வேண்டுகோள்களை கவனத்தில் கொண்டே இவ்வறிவுறுத்தல் விடுக்கப்படுவதாக கெளரவ மாநகர முதல்வர் தெரிவித்தார்.

ஆகையினால் அன்றைய தினம் எந்தவொரு டியூட்டரியையும் திறக்காமல் ஒத்துழைப்பு வழங்குமாறு அன்பாய் வேண்டுகின்றோம்.

இதனை கண்காணித்து, உறுதி செய்யுமாறு மாநகர சபையின் சம்மந்தப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், அன்றைய தினம் தங்களது பிள்ளைகளை டியூசனுக்கு அனுப்புவதைத் தவிர்த்துக் கொள்ளுமாறு பெற்றோர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.

எமது குழந்தைகள்
பாதுகாப்பது நம் கடமை



Managing Director of 
 Tamil Tel News
 [News Editor & Present]
 S. Mohammed Osmi

Friday, 10 February 2023

மீண்டும் இலங்கையில் இன்று அதிகாலை ஒரு சிறு நில நடுக்கம் பதிவாகியுள்ளது.

இலங்கையில் இன்று அதிகாலை  ஒரு சிறு நில நடுக்கம்


♦️ அதிகாலை 3 மணியளவில் புத்தல, வெல்லவாய பிரதேசத்தில் ரிக்டர் அளவுகோலில் 2.3  அளவில் மற்றுமொரு சிறிய நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.மொனராகலை மாவட்டத்தின் பல பகுதிகளில் நேற்று 3.0 ரிக்டர் அளவில் சிறிய நிலநடுக்கம் பதிவானது அறிந்ததே.

♦️தேசிய கட்டிட ஆராய்ச்சி அமைப்பு (NBRO) எந்த ஆபத்தும் இல்லை என்று உறுதியளிக்கிறது மற்றும் பீதி அடையத் தேவையில்லை என்பதால் அனைவரும் அமைதியாக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறது.


Managing Director of 
 Tamil Tel News
 [News Editor & Present]
 S. Mohammed Osmi

துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 24,000 ஐ கடந்தது.


துருக்கி மற்றும் சிரியா நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 24,000 ஐ கடந்தது.


👉துருக்கி மற்றும் சிரியா நாடுகளின் எல்லையில் கடந்த திங்கட்கிழமை அதிகாலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. பலரும் உறங்கி கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட இந்நிலநடுக்கம் அதிக அளவில் உயிரிழப்பை ஏற்படுத்தியுள்ளது.துருக்கி காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகிக்கு கிழக்கே 23 கி.மீ. தொலைவில் 24.1 கி.மீ. ஆழத்தில் நிலநடுக்கம் தாக்கியது.

👉ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கம் எதிரொலியாக துருக்கி, சிரியாவின் எல்லை நகரங்களில் கட்டிடங்கள் குலுங்கின.இந்த நிலநடுக்கம் இஸ்ரேல், லெபனான், எகிப்து நாட்டின் கெய்ரோ நகரம் உள்ளிட்ட அண்டை நாட்டு பகுதிகளிலும் உணரப்பட்டுள்ளது.

👉இந்த நிலநடுக்க பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.இரு நாடுகளிலும் மொத்தம் 24 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

👉இதனை அடுத்து, பேரிடர் பகுதிகளுக்கு துருக்கி ஜனாதிபதி ரீசெப் தயீப் எர்டோகன் சென்று பார்வையிட்டுள்ளார். நேற்று அவர் அதியமான் மாகாணத்திற்கு சென்று பார்வையிட்டார்.அரசின் நடவடிக்கை தேவையான அளவுக்கு விரைவாக இல்லை என அவர் கூறினார். உலகில் மிக பெரிய தேடுதல் மற்றும் மீட்பு குழுவினரை நாங்கள் கொண்டிருந்தபோதிலும், நாங்கள் விரும்பிய வண்ணம் தேடுதல் முயற்சிகள் விரைவாக இல்லை என்று துருக்கி ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

👉அந்நாட்டில் வருகிற மே 14-ம் திகதி தேர்தல் நடைபெறள்ளது. இதில், எர்டோகன் மீண்டும் போட்டியிடும் முனைப்பில் உள்ளார். எனினும், இந்த விவகாரம் அவரது எதிர்க்கட்சிக்கு சாதகம் ஏற்படுத்தியுள்ளது.இந்த பேரிடரால் தேர்தல் தள்ளி போடப்பட கூடிய சூழலும் காணப்படுகிறது. நிலநடுக்கம் பாதித்த பகுதிகளுக்கு இந்தியா போன்ற உலக நாடுகள் மருத்துவ பொருட்கள் உள்ளிட்ட நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றன.

👉நிலநடுக்கம் ஏற்பட்டு 4 நாட்கள் ஆன நிலையில், தெற்கு துருக்கி மற்றும் வடமேற்கு சிரியாவில் மொத்த உயிரிழப்பு 24 ஆயிரம் கடந்து உள்ளது என சிட்னி மார்னிங் ஹெரால்டு என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.இதில், குழந்தைகள், பெண்கள் மற்றும் முதியவர்கள் என அனைத்து மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து மீட்பு பணி நடந்து வருகிறது.

Managing Director of 
 Tamil Tel News
 [News Editor & Present]
 S. Mohammed Osmi

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு

அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பு


அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் தீவிரமடைந்து வரும் கடலரிப்பின் காரணமாக,

பல நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களை மக்கள் இழந்து வருவதோடு அங்குள்ள மீனவர்களும் தொழில் நடவடிக்கைகளில் பெரிய இடர்களை எதிர்கொண்டு வருவதாக கவலை தெரிவிக்கின்றனர்.

▶️குறிப்பாக 👇

⭕மருதமுனை 
⭕பாண்டிருப்பு 
⭕பெரியநீலாவணை 
⭕சாய்ந்தமருது 
⭕அட்டாளைச்சேனை 
⭕நிந்தவூர்
⭕ஒலுவில் 
⭕பொத்துவில் 

போன்ற பிரதேசங்களில் காற்றின் வேகம் அதிகரிப்பு காற்றின் திசை மாற்றம் நீரோட்டத்தில் ஏற்ப்பட்டுள்ள திசை மாற்றம் கடல் நீரின் தன்மை வழமைக்கு மாறாக,

குளிர்ச்சியாக காணப்படுகின்ற காரணங்களால் கடல் அலைகள் கொந்தளிப்பான நிலையில் காணப்படுவதினாலும் கடற்றொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக மீனவர்கள் தெரிவித்தனர்.

குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் ஒலுவில் தொடங்கி நிந்தவூர், காரைதீவு வரையிலான பகுதிகளில் ஏற்பட்டுள்ள கடலரிப்பின் காரணமாக,

400 மீட்டர் வரையிலான நிலப்பகுதிக்குள் கடல் புகுந்துள்ளதாகவும் கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு ஏற்பட்டு வருகின்றமையினால் மீனவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

காரைதீவு, நிந்தவூர் கரையோரப் பிரதேசத்தில் கடந்த சில தினங்களாக கடல் அரிப்பு அதிகரித்துவருகின்றமையினை தடுக்க நிரந்தரமாக கடல் அரிப்பை தடுக்க நடவடிக்கை முன்னெடுக்க பல்வேறு தரப்பினர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

எனினும் அம்பாறை மாவட்டத்தின் கரையோரைப் பிரதேசங்களில் இவ்வாறு கடலரிப்பு தீவிரமடைவதற்கு ஒலுவில் பிரதேசத்தில் துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையே பிரதான காரணம் என அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக குற்றச்சாட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


Managing Director of 
 Tamil Tel News
 [News Editor & Present]
 S. Mohammed Osmi

இலங்கையில் சில பகுதிகளில் 3.0 ரிக்டர் அளவில் பூமி அதிர்வு

இலங்கையில் சில பகுதிகளில் 3.0 ரிக்டர் அளவில் பூமி அதிர்வு

இலங்கையின் வெல்லவாய, புத்தல மற்றும் ஹந்தபானகல பகுதியில் 3.0 ரிக்டர் அளவில் பூமி அதிர்வு உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பூமி அதிர்வினால் எந்தவித பாதிப்பும் இல்லை மக்கள் அச்சமடைய தேவையில்லை என கூறப்பட்டது.

மேலதிகத்தகவல்கள்.

⚡️புத்தல – வெல்லவாய பகுதியில் சிறிய அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.நிலநடுக்கத்தின் மையம் பெலவத்தையில் உள்ள சீனி தொழிற்சாலைக்கு அருகில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் பிரேம் தெரிவித்துள்ளார்.

⚡️அதன்படி, சுற்றுவட்டார பகுதிகளில் உரிய அதிர்வு உணரப்பட்டதாக சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.இன்று மதியம் 12.13 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவுகோளில், 3 மெக்னிடியூட் அளவில் பதிவாகியுள்ளதாக சுரங்கப் பணியகத்தின் பணிப்பாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

⚡️நாட்டில் அமைந்துள்ள நான்கு நிலநடுக்க மையங்களிலும் நில அதிர்வு பதிவாகியுள்ளதுடன், நிலநடுக்கம் தொடர்பாக மேலும் அவதானம் செலுத்தப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.இது இலங்கையில் ஏற்பட்ட அதிர்வு என கண்டறியப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Managing Director of 
 Tamil Tel News
 [News Editor & Present]
 S. Mohammed Osmi

Friday, 20 January 2023

அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

 

அர்ஜென்டினாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்.

⚡️அர்ஜென்டினாவில் இன்று அதிகாலை 3.39 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டின் கார்போடா பகுதியில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிச்டர் அளவுகோலில் 6.5 புள்ளிகளாக பதிவானது.

⚡️சில வினாடிகள் நீடித்த நிலநடுக்கத்தின் போது கட்டிடங்கள் குலுங்கின. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் புகுந்தனர். நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.