Tuesday, 10 January 2023

மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட தாதுகோபுரத்தை 100 கோடிக்கு விற்க முயன்றவர் கைது.

 

மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட தாதுகோபுரத்தை 100 கோடிக்கு விற்க முயன்றவர் கைது.
புதையல் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட தாதுகோபுரம்.

100 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய முயன்ற நிலையில் சிக்கியது.

100 கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய தயாராக இருந்த மாணிக்கக் கற்கள் பதிக்கப்பட்ட சிறிய தாதுகோபத்துடன் சந்தேக நபர்கள் சிலரை காவல்துறை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த தாதுகோபங்கள் புதையல் ஒன்றில் இருந்து எடுக்கப்பட்டுள்ளதாகவும், காவல்துறை விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம்,

நேற்று (09) வயங்கொட - யதகம பிரதேசத்தில் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தாதுகோபங்கள் மிகவும் புராதனமானவை எனத் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் பஸ்வெல்ல மற்றும் கோனகல பிரதேசங்களை சேர்ந்தவர்களாவர்.



Previous Post
Next Post
Related Posts

0 coment rios: