Monday, 9 January 2023

பேருந்துக் கட்டணம் குறைவடையுமா...?

 

பேருந்துக் கட்டணம் குறைவடையுமா...?

⭕️பேரூந்து கட்டணத்தை குறைப்பதற்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டாலும் அது தம்மால் முடியாது என பேரூந்து சங்கங்கள் தெரிவிக்கின்றன.

⭕️பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு மற்றும் பஸ் சங்கங்களுக்கு இடையிலான விசேட கலந்துரையாடல் இன்று (09) காலை 10.00 மணியளவில் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவில் இடம்பெற்றது.பேருந்துக் கட்டணத் திருத்தம் அதன்படி இன்று பேச்சுவார்த்தைக்கு பேரூந்து சங்க பிரதிநிதிகள் வந்திருந்தனர்.

⭕️இந்த நிலையில், அகில இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் அஞ்சன பிரியஞ்சித்   தெரிவிக்கையில்,“என்ன விவாதித்தாலும் பரவாயில்லை, பேரூந்து கட்டண குறைப்பு பற்றி விவாதிக்க முடியாது. தற்போதைய சூழ்நிலையில் வாகன உதிரிப்பாகங்களின் விலை 500% அதிகரித்துள்ளது.

⭕️அதனால் அரசு வாக்களித்தாலும் பரவாயில்லை. பேசுவது சாத்தியமற்றது. இந்த நேரத்தில் பேருந்து கட்டணத்தை குறைக்க வழி இல்லை. இது தேசிய கொள்கைக்கும் எதிரானது என்றார் .இலங்கை தனியார் பேரூந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன கருத்துத் தெரிவிக்கையில்; “எவ்வாறாயினும், தற்போது அதைக் குறைக்க முடியாது என தெரிவித்திருந்தார் .

Previous Post
Next Post
Related Posts

0 coment rios: