இன்று நாட்டின் வடமத்திய, கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மாவட்டத்திலும் பல முறை மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல் அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும்.
சப்ரகமுவ மாகாணத்திலும், களுத்துறை, காலி மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும்.
அப்பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என கூறப்படுகிறது.

0 coment rios: