அதிசயம் ஆனால் நிஜம்.!
எட்டாம் வகுப்பு மாணவிக்கு ஆசிரியர் காதல் கடிதம்.!
தந்தைக்கும் மிரட்டல்..!
ஆசிரியர் ஒருவர் தனது வகுப்பில் கல்விகற்க்கும் 8ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு காதல் கடிதம் எழுதியுள்ளார்.
ஆசிரியர் தனது காதல் கடிதத்தில், உன்னை நான் அதிகம் விரும்புகிறேன். விடுமுறை காலத்தில் நீ இல்லாதது எனக்கு மிகுந்த வருத்தம் தருகிறது.
உன்னால் எப்போது முடியுமோ அப்போது தொலைபேசி வழியாக என்னிடம் தவறாமல் பேசு பரிட்சை கால விடுமுறை விடுவதற்கு முன்பு தனியாக என்னை நீ வந்து சந்திக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.
மேலும் அக் கடிதத்தில் உன்னை திருமணம் செய்து கொள்ளவும் நான் விரும்புகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பிட்ட காதல் கடிதத்தில் மொத்தம் 12 காதல் வரிகள் உள்ளன.
காதல் கடிதத்தில், இந்த கடிதத்தை படித்து முடித்து விட்டு யாருக்கும் தெரியாமல் கிழித்து எறிந்து விட வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் ஆசிரியரின் காதல் கடிதத்தை கண்டு அதிர்ச்சியடைந்த 8ம் வகுப்பு மாணவி அந்த கடிதத்தை தனது பெற்றோரிடம் காட்டியுள்ளார்.
ஆசிரியரின் கடிதத்தை படித்து பார்த்து அதிர்ச்சி அடைந்த மாணவியின் தந்தை ஆசிரியரின் தொலைபேசியை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
அப்போது அந்த ஆசிரியர் மாணவியின் தந்தையிடம் தன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது எனவும்,
மேலும் இந்த விஷயம் வெளியே தெரிந்தால் மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கொள்வேன் என்று மிரட்டி இருக்கிறார்.
இதனால் பீதியடைந்த மாணவியின் தந்தை பொலிசில் புகார் செய்துள்ளார்,
அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து ஆசிரியருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்கள்.
குறிப்பிட்ட ஆசிரியருக்கு வயது 42 என்பதோடு திருமணமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைவரும் பகிர்ந்து கொள்ளுங்கள்

0 coment rios: