ஜனாதிபதியின் தலைமையில் நாளை (9) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில்,
மின்சாரக் கட்டணத்தை திருத்துவது தொடர்பான இறுதித் தீர்மானம் எட்டப்படவுள்ளது.
இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் கடந்த கடந்த கூட்டத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், தீர்மானம் எட்டப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது.
குறித்த அமைச்சரவை பாத்திரத்தின் பிரகாரம் ஒரு யூனிட் மின்சாரத்திற்கான கட்டணம் மற்றும் நிலையான கட்டணத்தை அதிகரிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
இதன்படி, முதல் 30 யூனிட்டுகளுக்கு தற்போதைய குறைந்தபட்ச கட்டணம் 8 ரூபாயில் இருந்து 30 ஆக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 coment rios: