Thursday, 12 January 2023

நாங்கள் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளோம்.

 

நாங்கள் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளோம்.

🔺இலங்கையர்களாகிய நாம் வங்குரோத்து நிலையை அடைந்துள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.வங்குரோத்து நிலையில் இருந்து எப்படி நாம் வெளியே வருவது என என்பது தொடர்பில் சிந்திக்க வேண்டும் என அவர் கூறினார்.

🔺இதற்கான ஒரே வழி சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதாகும்.சர்வதேச நாணய நிதியத்தை நாடுவதை தவிர எமக்கு வேறு வழி இல்லை.அவர்கள் எமக்கு உதவுவதாக இருந்தால் எமது நாட்டில் நட்டத்தில் இயங்கும் அரச நிறுவனங்களை லாபமீட்டும் நிறுவனங்களாக மாற்ற வேண்டும் அதை தான் நாம் இப்பொது செய்ய ஆரம்பித்துள்ளோம்.

🔺மூன்று கட்டங்களாக எமக்கு சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து 2.5 பில்லியன் டொலர்கள் கிடைக்கும். உலக வங்கி உள்ளிட்ட நிறுவனங்கள் மூலம் 5 பில்லியன் டொலர்கள் எதிர்பார்க்கிறோம். இந்த வருடத்திற்குள் 7.5 பில்லியன் அமெரிக்க டொலர்களை நாம் எதிர்ப்பார்க்கிறோம். அத்தோடு சில அரச நிறுவங்களை தனியார் மயப்படுத்தி கிடைக்கும் பணத்தையும் கையில் வைத்துக்கொண்டு சவால்களை எதிர்கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.


Previous Post
Next Post
Related Posts

0 coment rios: