Saturday, 7 January 2023

இன்று கனமழை பெய்யும் சாத்தியம்!

 

வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ,

பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கிழக்கு மாகாணம் மற்றும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யும் சாத்தியம் காணப்படுவாதாக திணைக்களம் குறிப்பிடுகின்றது.

ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணம், களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களின் சில இடங்களில் 75 மில்லி மீற்றருக்கு அதிக கனமழைக்கு வாய்ப்புள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், 

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை குறைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

Previous Post
Next Post
Related Posts

0 coment rios: